இலவச சுகாதார சேவை என்பது இலங்கையின் தனித்துவமான அடையாளமாகும். அதில் பொது சுகாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு சுற்றுலா துறை மிகவும் முக்கியமானது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நாட்டின் பொது சேவைகள் அமைய வேண்டும்.
குறிப்பாக பொது போக்குவரத்து, பொது சுகாதாரம் இதில் முக்கியமானவை.
இலங்கையின் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்ல உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
பதுளை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், காலி போன்ற சுற்றுலா தள மாவட்டங்களுக்கு செயற்படுத்தப்படும் ரயில் சேவை சுகாதாரம் மற்றும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக சில அதிகாரிகளின் கவனயீனத்தால் ரயில் போக்குவரத்து சேவையை சுற்றுலா பயணிகளும் சாதாரண பயணிகளும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது.
கீழே காணப்படும் புகைப்படம் கொழும்பு – மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் ‘பாடுமீன்’ ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் உள்ள பயணிகள் பொது மலசலகூடமாகும்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு செல்ல முதல் வகுப்புக்கு (first class) 3000 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது.
ஆனால் அங்கு காணப்படும் மலசலகூடம் நகரங்களில் காணப்படும் பொது மலசல கூடங்களை விடவும் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த மலசலகூடத்தை பயன்படுத்த செல்வோர் தமது வாழ்க்கையில் ரயில் பயணத்தை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். சுற்றுலா பயணிகள் இனி இலங்கை வருவதை தவிர்ப்பதோடு தங்களது நண்பர்களுக்கும் இதனை அறிவிப்பர்.
அதிகாரிகளின் கவனக் குறைவால் நமது நாட்டிற்கு இப்படி ஒரு கேவலமான அபகீர்த்தி தேவையா? பாடுமீன் ரயிலில் மலசலகூடம் புதிதாக மாற்றி அமைக்கப்படும் வரை இந்த செய்தியை பகிர்வோம்.