பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வை புறக்கணிக்க சஜித் அணி முடிவு

0
53

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (08) நடைபெறவுள்ள பாராளுமன்றத்தின் புதிய சபை ஆரம்ப நிகழ்வை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் நோக்கில் கடந்த பாராளுமன்ற அமர்வை முடிப்பதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திரு.திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் புதிய பாராளுமன்ற அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் தீர்மானத்துடன் உடன்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here