தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரு காலத்தில் காதலர்களாக சுற்றி திரிந்தார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திர ஜோடியாகவும் இருந்தனர். ஆனால் அவர்கள் சென்ற வருட இறுதியில் திடீரென விவகாரத்தை அறிவித்தனர். இது அவர்களது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் சமந்தா ஒரு பழைய பேட்டியில் நாக சைதன்யா பற்றி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
“சாய் (Chay) ஒரு ஹஸ்பெண்ட் material. என்னிடம் எதுவுமே இல்லாத காலத்தில் இருந்தே அவர் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார். நான் அமெரிக்காவில் இருக்கும்போது என் அம்மாவுக்கு போன் செய்ய காசில்லாமல் இருந்தேன். எனினும் அப்போது அவரிடம் போன் வாங்கி தான் போன் செய்தேன். அந்த நிலையில் இருந்து தற்போது வரை அவர் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
”மற்றவர்களுக்கு என்னை பற்றி பாதி தான் தெரிந்திருக்கும். ஆனால் சாய் என்னை பற்றி முழுமையாக அறிந்தவர். ஒரு மனிதனாக நான் செய்த மிக மிக மோசமான தவறுகளையும் அவர் பார்த்திருக்கிறார்” என சமந்தா தெரிவித்து இருக்கிறார்.அத்தோடு கணவர் பற்றி அப்படி பேசிய சமந்தாவா இப்படி திடீரென விவாகரத்து பெற முடிவெடுத்தது என ரசிகர்கள் வருத்தத்துடன் பேசி வருகின்றனர்.