சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FFTU) இன்று (ஜன. 07) பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு விஹார மகாதேவி பூங்கா வளாகத்தில் இருந்து சுகாதார அமைச்சு வரை கண்டன பேரணி ஒன்றை முன்னெடுத்தது.
இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற்சங்க தலைவர்களுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வரும் நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும், நாளைய தினம் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புகைப்படம் – அஜித் செனவிரத்ன