எதிர்காலத்தில் ஒரு நாள் அவருக்கு கல்வி அமைச்சு கிடைத்தால், பாடசாலைகள் முழுவதும் கோவில்களை திறந்து பூஜை செய்வாரோ தெரியவில்லை.

Date:

கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுத தயாரான மாணவர் குழுவொன்று சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதை காண முடிந்தது.முன்னதாக ஜனவரி 20ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கும் இதேபோன்ற பூஜையை நடத்தி, பரீட்சைக்கு எடுத்துச் செல்ல பேனாக்கள் மற்றும் கோப்பு அட்டைகளை விநியோகித்துள்ளார்.


பிள்ளைகளின் கல்வியில் உண்மையான அக்கறை இருந்தால், பரீட்சை சார்ந்த கல்வி கருத்தரங்குகளை நடத்துவது அல்லது கல்வித்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வரவழைத்து மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக அன்றி பெற்றோரின் வெறும் வாக்குகளைப் பறிக்கும் ஏமாற்று நோக்கத்தில்தான் பூஜை நடத்தப்பட்டுள்ளமை தெளிவாகிறது.


மாத்தறையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு வந்த புத்திக பத்திரன ஒரு போதும் மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் மத்தியில் இவ்வாறான மூட நம்பிக்கை மாயைகளை பரப்பக்கூடாது.


குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தற்போது கஸ்டப்பிரதேச பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு கணனி, டிஜிட்டல் உபகரணங்கள் விநியோகித்து கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது பற்றி பேசுகையில், புத்திக பத்திரன மறுபக்கம் மூடநம்பிக்கை மாயைகளை விதைத்து கல்வியை சீரழித்து வருகிறார்.உண்மையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரின் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கையை புத்திக பத்திரன கேலி செய்கிறார்.


பாராளுமன்றத்தில் கூட தேசிய மட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கும் போது, அடிக்கடி மது பிரச்சினை அல்லது கஞ்சா பிரச்சினையை பேசிக்கொண்டு பையை நிரப்பும் புத்திக பத்திரனவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் என்ன கேலிக்கூத்து செய்வார் என்பதை நினைத்துப் பார்க்கவும்.தவறுதலாக எதிர்காலத்தில் ஒரு நாள் அவருக்கு கல்வி அமைச்சு கிடைத்தால், பாடசாலைகள் முழுவதும் கோவில்களை திறந்து பூஜை செய்வாரோ தெரியவில்லை.


பூஜை செய்து வைத்தியராக முடியாமல் போனதால் ஊடக துறையில் வந்து அரசியலில் நுழைந்தார்.தப்பித்தவறி வைத்தியராக வந்திருந்தால் பாதெனியவிற்கு அடுத்படியாக இருப்பார்.நாட்டின் அதிஉயர் நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட பிற்போக்குவாத குண்டர்கள் இருப்பதுதான் கவலை. ஏனெனில் இதன் விளைவுகள் மாத்தறை மக்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் தான்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...