தமிழக மீனவர்களின் படகு ஏலத்தில் விற்கப்பட்ட விடயம் குறித்து இந்தியா அதிருப்தி

Date:

இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் விடயம் தொடர்பில் கலந்துரையாட தமிழக மீனவர் பிரதிநிதிகள் இலங்கை வருவிருப்பதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:

இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுவது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே உள்ளது என்பதை வலியுறுத்தி கூறுகின்றோம்.

இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவிருந்தனர். இந்த விஜயத்திற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசிடம் உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...