பலாலியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

0
60

யாழ்ப்பாணம், பலாலி கிழக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடிதப் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்து, காணி விடுவிப்புக்கான அளவீட்டுப் பணிகள் உள்ளிட்ட இதர பணிகளை முன்னெடுக்கும்.

அதனையடுத்து காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here