லண்டன் நேரப்படி சுமார் 16:50 மணிக்கு ஹாக்னி விக்கில் உள்ள பப் இல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கிழக்கு லண்டன் பப் ஒன்றில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சிக்கிய 7 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மூன்று பேர் பலத்த காயம் அடைந்ததாகவும், மேலும் 10 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹோமர்டன், பெத்னல் கிரீன் மற்றும் லெய்டன் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களின் குழுவினர் மற்றும் ஈஸ்ட் ஹாம் மற்றும் எட்மண்டன் நிலையங்களில் இருந்து இரண்டு மீட்புப் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு வந்தது மீட்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.