முல்லைத்தீவு – குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆறுமுகத்தான் குளத்தினை சேர்ந்த 48 வயதுடைய துரைராசா ஆனந்தராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
வேட்டைக்கு சென்ற குறித்த நபர் காட்டிற்குள் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் அழைத்துவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பயன்படுத்திய சட்டவிரோத துப்பாக்கி மற்றும் அவரது சடலம் தண்ணிமுறிப்பு குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.