முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் சீனாவுக்குச் செல்வதற்கான எதிர்பார்ப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 12.25 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்-178 புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற விமான நிலைய விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
N.S