இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அதேவேளை, மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகத் தான் தொடர்ந்து குரல் கொடுக்கின்றார் என்றும், தமது கட்சியின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் சிறீதரன் எம்.பி. உறுதியளித்துள்ளார்.