கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை

Date:

கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து.

கொழும்பு மக்கள் 16 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.

கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (17) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியுடன் முடிவடையும் என NWSDB தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் முறைமை மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக நீர் வெட்டு அவசியமானது என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு NWSDB அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நீர் வெட்டுக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தண்ணீரைச் சேமிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை NWS&DB கேட்டுக் கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...