மத்துகம பாலிகா வீதி பகுதி வீடொன்றிற்குள் புகுந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலையாளிகள் இருவரும் பெண்ணின் கணவரைக் கொல்ல வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அப்போது அவர் வீட்டில் இருந்தபோதும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏதும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் டி-56 ரவைகளின் ஆறு ஷெல் உறைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.