பிரித்தானியாவில் இனரீதியாக தாக்கப்பட்ட இலங்கை சிறுவன்

Date:

லண்டனில் வசித்துவரும் 12 வயது இலங்கை வம்சாவளி சிறுவன் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆனபிறகும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதால் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனும் அவரது குடும்பத்தினரும் மனம் திறந்துள்ளனர்.

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சதி பாலகுரு (Sathi Balaguru). அவர் 2020 ஆக்டொபரில் மேற்கு லண்டனில் உள்ள Pitshanger FC கால்பந்து அணிக்காக ஒன்பது பேர் கொண்ட ஆட்டத்தில், Wealdstone Youth FC அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது இது நடந்துள்ளது. அப்போது பெனால்டி சம்பவத்தின் போது அவர் தவறுதலாக “இந்திய சிறுவன்” (Indian Boy) என்று அழைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, எதிரணியில் இருந்த சிறுவர்கள் இந்தியர்களை அல்லது ஆசியர்களை குறிப்பிடும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி பாலகுருவை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.Photograph: Martin Godwin/The Guardianஇந்த சம்பவம் பாலகுருவை வருத்தமடையச் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

ஏனெனில், இந்த சம்பவம் தொடர்பாக பாலகுருவின் கால்பந்து கிளப் எந்த ஆதரவும் தரவில்லை மற்றும் சம்பந்தப்பட்ட எதிர் அணியிடமிருந்தும் இதுவரை மன்னிப்பு கேட்கப்படவில்லை என்று பாலகுருவும் அவரது குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.இப்போது 12 வயது ஆகியுள்ள நிலையில், பாலகுரு இந்த விடயங்கள் குறித்து பேச முடிவு செய்துள்ளார்.

தனது வாழ்க்கையை கையாளுவதில் அக்கறை கொண்டுள்ள அவர், விளையாட்டில் இனப்பாகுபாடு தனது முன்னேற்றத்தை மட்டுப்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளார். அந்த அணியில் ஆசியப் பின்னணியில் இருந்து வந்த ஒரே வீரர் பாலகுரு தான், “ஆசியப் பின்னணியைக் கொண்டிருப்பது தொழில்முறை கால்பந்து வீரராக இருப்பதில் எனது வாய்ப்புகளை ஏற்கனவே 50% குறைக்கும்” என்று தான் இப்போது உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே கால்பந்து விளையாட்டில் தெற்காசிய வீரர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள் என்பதால், இந்த கவலைக்கு மத்தியில் இந்த சம்பவம் குறித்து அவர் பேசியுள்ளார்.சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு பிட்ஷாங்கர் எஃப்சியின் பாதுகாப்பு அதிகாரியான கர்டிஸ் அல்லெய்ன், Middlesex FA மற்றும் Wealdstone FC அணியை தொடர்புகொண்டார், ஆனால் எஃப்ஏ விதிகளின்படி 11 வயதிற்குட்பட்டவர்கள் மீது தவறான நடத்தைக் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்ய முடியாது என்று எஃப்ஏ கூறியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...

லஞ்சம் பெற்ற பொலிசார் கைது

அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள்...

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...