ஹொரணை, கந்தானை பகுதியில் வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி குழந்தையை கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அங்குருவாதொட்ட, பல்லபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஹொரண, இலிம்ப பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரகே டொன் நீலக சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நபர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் என அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.