இலங்கைக்கு சீனா ஏற்கனவே ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது ; சீன வெளிவிவகார அமைச்சு

0
75
Chinese Foreign Ministry spokesman Wang Wenbin takes a question at the Foreign Ministry briefing in Beijing on November 9, 2020. (Photo by GREG BAKER / AFP)

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு கடன் நீட்டிப்பை வழங்கியுள்ளது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு இன்று திங்கட்கிழமை கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவுக்கான உத்தியோகபூர்வ உத்தரவாதம் இல்லாமல்இலங்கையின் பிணையெடுப்பை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்ததை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

இதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடனை நீட்டிக்க விருப்பம் தெரிவித்து, இலங்கையின் கடனை நிலைநிறுத்துவதற்கான கடிதத்தை சீனா ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில், இலங்கை ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, இது குறுகிய கால கடன் அழுத்தத்தை குறைக்க இலங்கைக்கு உதவுகிறது என்றும் கூறினார்.

“இலங்கையுடன் ஒரு நடுத்தர மற்றும் நீண்ட கால கடனை அகற்றும் திட்டத்தை நட்புரீதியில் பேச்சுவார்த்தை நடத்த இந்த சாளரத்தை பயன்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம், மேலும் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்றும் வாங் கூறினார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here