வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் பூர்த்திசெய்வதில்லை – சாணக்கியன்

0
132

நாட்டைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சில சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததுடன் சில வற்றை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பை, அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, தேவைகளைப் பூர்த்தி செய்யவோ எந்தவொரு நடவடிக்கையும் கொள்கையும் திட்டமிடலும் அரசிடம் இல்லை.

ஓர் கண்துடைப்பாகவே இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு TRC – Truth, Unity and Reconciliation Commission உள்ளது. உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழுவை, சர்வதேசத்தை மகிழ்விக்கவே அரசு கொண்டு வருகிறது. எம் மக்கள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இதனை நிராகரித்துள்ளன.

தாம் தமிழ் மக்கள் சார்பாக பல திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்பதனைக் காட்டும் ஓர் கண்துடைப்பே இதுவாகும். எமக்கான அதிகாரப் பரவலாக்கல் பற்றியோ அரசியல் அதிகாரம் பற்றியோ எமக்கான தீர்வு பற்றியோ எவ்வித முன்னேற்றமும் இல்லை நடவடிக்கையும் இல்லை- என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here