பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று அல்லது நாளை 20 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
“இன்று அல்லது நாளை பெட்ரோல் 20 ரூபாயும், டீசல் 22 ரூபாயும் அதிகரிக்கும் என்று கணிக்கிறேன். இன்றிரவு கூட அதிகரிக்கலாம். எமது ஆட்சி காலத்தில் பெட்ரோலுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்ட போது சிலர் சைக்கிளில் பாராளுமன்றம் சென்றது மக்களுக்கு நினைவிருக்கிறதா?
சில மாதங்களுக்கு முன்பே 20 ரூபாய் அதிகரித்தது. தற்போது மீண்டும் 20 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் கம்மன்பில கதறி அழுதார், ‘எனக்கு இப்போது செய்ய ஒன்றுமில்லை, உலகில் மிகவும் தாழ்வான நாடு எமது நாடு, எண்ணெய் கொண்டு வர டொலர் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கூறுகிறது, பணம் இல்லை, அதனால் ஒரு மாதத்திற்கு மேல் இயங்க முடியாது’ என கம்மன்பில கூறுகிறார்.
அது யாருடைய தவறு? என அசோக் அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.