தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

Date:

தேசிய மக்கள் சக்தியை தேர்தல் ஆணைக்குழு பதிவு செய்த விதம் சட்டவிரோதமானது என்றும், இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் 04-ம் திகதி சமர்ப்பணங்களை உறுதிப்படுத்தி விசாரணை அழைப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வென்னப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்தது.

அப்போது, ​​மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, உரிய மனுவை பரிசீலிக்க திகதி ஒதுக்குமாறு கோரினார்.

அந்த கோரிக்கையை ஏற்று, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், சம்பந்தப்பட்ட மனுவை பரிசீலிப்பதற்காக மார்ச் 4-ம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய மறுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவின் ஊடாக நாகானந்த கொடித்துவக்கு கூறுகின்றார்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு நாகாநந்த கொடித்துவக்கு அந்த மனுவின் ஊடாக உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...