இந்திய மீனவர்களை விடுவிக்காத நிலையில் இந்திய யாத்திரிகர்கள் எவரும் கச்சதீவு செல்லவில்லை என்று இராமேஸ்வரம் – வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு எழுத்தில் அறிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் நால்வருக்குச் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள நால்வரையும் விடுவிக்கக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு கச்சதீவு உற்சவத்தையும் புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தனர்.
மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, இந்தியாவில் இருந்து கச்சதீவுக்கு வரும் யாத்திரிகர்களை ஒழுங்கமைக்கும் பங்குத் தந்தையான சந்தியாகு இம்முறை இந்திய யாத்திரிகர்கள் கச்சதீவுக்குச் செல்லவில்லை என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இன்று எழுத்தில் கடிதம் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக இலங்கை – இந்தியா இடையே இராஜதந்திர உறவில் பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.