தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து பாராளுமன்ற அமைச்சர்களின் சிறப்புரிமைகள் பறிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளும் சாதாரண அரசு ஊழியர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்பை அரசாங்கம் கைவிடுவதாகவும், ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் மற்றும் அமைச்சர்களின் வரம்பற்ற கொடுப்பனவுகள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பதுளையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
N.S