கடும் கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுக்கு அனுமதி

0
166

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ள 07 ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07 ஆலயங்களுக்கு சென்று வழிபடவே இராணுவத்தினர் இன்று அனுமதித்துள்ளனர்.

கட்டவன் முத்துமாாி அம்மன் ஆலயம் (J/238), மானம்பிராய் பிள்ளையாா் ஆலயம் (J/245), சிவன் ஆலயம் (J/245), நாகா் கோவில், சக்தியுடையாள் அம்மன் ஆலயம்(J/245).

விபரங்கள் ஒப்படைக்காத ஆலயங்கள்

பலாலி வடக்கு இராஜ இராஜேஸ்வாி அம்மன் ஆலயம்(J/254), பலாலி வடக்கு நாக தம்பிரான் ஆலயம்(J/254)

இதன்படி, ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பனவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விபரங்களை நிர்வாகத்தினர் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here