தற்போதைய அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறும், அரசியலமைப்புச் சட்டத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
லேக்ஹவுஸ் ஊடகவியலாளர் மதுக்க தக்சலா மீதான தாக்குதல், சமூக ஊடக செயற்பாட்டாளர் ரம்சி ராசிக் கைது, சத்துரங்க அல்விஸ் கைது, அஹ்னாப் ஜாசிம் கவிஞர், சிரந்த அமரசிங்க, சுதத்த திலகசிறி, கீர்த்தி ரத்நாயக்க, அசேல சம்பத், போன்றோரை அவர் நினைவு கூர்ந்தார்.
செயற்பாட்டாளர்கள் CIDக்கு வரவழைக்கப்பட்டு, அத்தகைய அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள், சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் இணையத்தள செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடக வலையமைப்பைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவதாகவும், ஜனநாயக சமூகத்தில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாச நேற்று (22) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.