நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று இந்தியா நோக்கி செல்லவுள்ளார்.
எனினும் அவரின் இந்திய விஜயம் இறுதி தருணத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிதி அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார்.
அண்மையில் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய பிரதமரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.