ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் உட்பட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (ஜன. 25) திகதி குறித்து உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய மொஹமட் இன்ஷாப் மற்றும் மொஹமட் இல்ஹாம் ஆகிய இரு பயங்கரவாதிகளின் தந்தையான மொஹமட் இப்ராஹிமும் தெமட்டகொடையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நடத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை மறைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.