மைத்திரியின் கோட்டையில் அநுரவுக்கு மாபெரும் வெற்றி!

Date:

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு சேவை கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.

ஹிகுராக்கொட எதிர்க்கட்சி சேவை கூட்டுறவுச் சங்க தேர்தலில் 60 உறுப்பினர்களில் 43 உறுப்பினர்களையும், கவுடுல்ல கூட்டுறவுச் சங்கங்கத்தில் 72 உறுப்பினர்களில் 60 உறுப்பினர்களையும், புலஸ்திகம கூட்டுறவுச் சங்கங்கத்தில் 78 உறுப்பினர்களில் 70 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுடைய குழு வென்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற குழுக்களும் இந்த அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் போட்டியிட்டாலும் அவர்களால் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை.

பொலன்னறுவை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவுச் சங்க தேர்தல்களிலும் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றிகளை பெற்ருறிருந்தன. இந்நிலையில் தற்போது அவற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...