இலங்கை கிரிகெட் வீரர்கள் ஏற்றிச் செல்ல இருந்த பஸ்ஸில் தோட்டாக்கள் மீட்பு

Date:

இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட தனியார் பேருந்தில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து சண்டிகார் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பல இலங்கை வீரர்கள் தற்போது சண்டிகாரில் தங்கியுள்ளனர்.

டெஸ்ட் போட்டி மார்ச் 04-ம் திகதி தொடங்க உள்ளது.

இந்தியா டுடே செய்தியின்படி, இலங்கை வீரர்களை அவர்களது ஹோட்டலில் இருந்து மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்திற்கு அழைத்துச் சென்ற பேருந்தின் லக்கேஜ் பெட்டியில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மெட்டல் டிடெக்டர்களைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சனிக்கிழமை தோட்டாக்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நேரத்தில் பேருந்து விடுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...