கைது செய்யப்பட்ட முன்னாள் அரசுப் புலனாய்வு சேவை இயக்குநரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே அவர்கள் 90 நாட்கள் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, 2025 பிப்ரவரி 25 ஆம் திகதி காலை அவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்தது.
அவர் பேலியகொட பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிக்குச் சென்று கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
