அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தேர்தல் நடைபெறும் திகதி குறித்த தீர்மானம் இம்மாதம் அறிவிக்கப்பட்டாலும், மே மாதத்திலேயே தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது. .
நாட்டின் மக்கள் தாங்கள் தெரிவுசெய்ய விரும்பும் அரசியல் கட்சியை ஏற்கனவே தெரிவுசெய்துவிட்டார்கள் என்ற உண்மையின் வெளிப்படையான ‘பயமே’ தேர்தல் தாமதத்திற்கு காரணம்.
நம் நாட்டின் பொதுமக்கள் ஏற்கனவே தங்கள் அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுத்து, இப்போது அதன் சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் எந்தளவுக்கு ஒத்திவைக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு தேசிய மக்கள் சக்தி பலம் பெறும்.
அதன்படி, மக்கள் விரும்பும் மாற்றம் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று உறுதியளித்த அவர், இந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும், ஓராண்டுக்குத்தான் இந்த விளையாட்டுகளை விளையாட முடியும் என்றார்.
N.S