ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பை கோரப்போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (28) BMICH ல் உள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
ரஞ்சன்: நலமா?
பத்திரிகையாளர்கள் – நலம்
பத்திரிகையாளர்கள் – நீங்கள் தொடர்ந்து வர வேண்டுமா?ரஞ்சன்: பேசுவது தடைஊடகவியலாளர்கள்: ஜனாதிபதி மன்னிப்பாரா?
ரஞ்சன் – (தெரியாது – சைகையில்)
ஊடகவியலாளர்கள்: ஜனாதிபதி மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா?
ரஞ்சன் – மன்னிப்பு கேட்கப் போவதில்லை!