பாராளுமன்றம் செல்லத் தயங்கும் கெஹலிய

0
59

தரக்குறைவான மருந்து இறக்குமதி குற்றச்சாட்டில் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கெஹலிய ரம்புக்வெல்ல சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, அவரது செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, சபாநாயகரின் பணிப்புரையின் பேரில், அவரை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சார்ஜன்ட் தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here