நிறுவனங்களை விற்க விடமாட்டோம்

0
121

சிறிலங்கா ரெலிகொம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கத்தால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசியவள பாதுகாப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வங்கி ஊழியர் சங்கம், தேசிய மின்சார சபை, சிறிலங்கா டெலிகொம் மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய வளங்கள் பாதுகாப்பு இயக்கம், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை நேற்றுச் சந்தித்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், குறித்த அமைப்புக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.(க)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here