முன்னுரிமை அடிப்படையில் , பொலிஸ் பாதுகாப்புடன் எரிபொருளை வழங்க தீர்மானம்

Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில், மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியை பேணுவதற்காக, உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மாஅதிபர், அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமையில் ஈடுபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், அம்பியூலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலாத்துறை சார் வாகனங்கள், விவசாய செய்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, எரிபொருளை விநியோகிக்குமாறு, பொலிஸ் மாஅதிபர் அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...