ரணில் மீண்டும் நாடாளுமன்றம் வர விருப்பமில்லை

0
19

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் அண்மைய நாட்களில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக வெளியாகி வந்தது.

எனினும், அவருக்கு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் அரசியல் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும், “நான் செல்லக்கூடிய உயர்ந்த பதவிக்கு சென்றுவிட்டேன். மீண்டும் அந்த இடத்துக்கு வர எனக்கு எந்த எண்ணமும் இல்லை” என்று ரணில் விக்ரமசிங்க கூறியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here