Friday, May 17, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.03.2023

  1. பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த ஐந்து வருடங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை உலக மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான அடித்தளமொன்று தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
  2. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2022 ஆண்டு செப்டம்பர் 1.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில் 23.5 சதவீதம் அதிகரித்து 2023 பெப்ரவரியில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது : 2022 செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த மொத்தப் பணவீக்கம் ஜனவரி 2023 இல் 60.1 சதவீதமாகக் குறைந்தது : 2022 செப்டம்பரில் 29,802 பேராக இருந்தத சுற்றுலாப் பயணிகளின் வருகை 261 சதவீதம் அதிகரித்து 2023 பெப்ரவரியில் வருகை 107,639 பேராக உயர்ந்துள்ளது. அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் ‘அமைதியான’ சூழல் காரணமாக ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதேவேளை ஸ்திரத்தன்மை, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
  3. சமீபத்திய கணக்கெடுப்பின்படி அரசாங்கத்தின் புகழ் மேலும் 08 வீதமாக குறைந்துள்ளதாகவும் அதனால் அரசாங்கம் தேர்தலை நடத்த பயப்படுவதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
  4. முதலீட்டாளர்களை இலகுவாக அணுகுவதற்கும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கு அரசுக்கு சொந்தமான காணிகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் முதலீட்டுத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  5. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் நடத்தப்பட்ட விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. 09 – 10ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறும்.
  6. ஊடக ஜாம்பவான் திலித் ஜயவீர பொது அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக புயல் போன்று தகவல்கள் பரவி வருகின்றன ; தனது எதிர்கால அரசியல் பயணத்திற்காக ஹேமகுமார நாணயக்காரவுக்குச் சொந்தமான பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியை தாம் பெற்றுள்ளார் : ஜயவீர இதற்கு முன்னர் “அரமுன” என்ற இயக்கத்தை நிறுவி பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி இருந்தார்.
  7. தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது: ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அதன் உறுப்பினர்களான எம்.எம். முகமது, எஸ்.பி. தியரத்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
  8. குழந்தை உரிமைகள் தொண்டு நிறுவனமான “சேவ் தி சில்ரன்” கூறுகிறது, இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஒரு முழுமையான பட்டினி நெருக்கடியாக மாறியுள்ளது, பாதி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ; நாட்டின் குழந்தைகள் “இழந்த தலைமுறையாக மாறுவதை” தடுக்க இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இப்போதே செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கிறது.
  9. இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸினால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  10. Trans American Customhouse Brokers LLC மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை அதன் சமீபத்திய கையகப்படுத்தல் முக்கிய வட அமெரிக்க சந்தையில் தனது நிலையை மேலும் பலப்படுத்த உதவும் என்று Expolanka Holdings கூறுகிறது. Expolanka க்கு சொந்தமான முன்னணி உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் தளவாட தீர்வுகள் நிறுவனமான EFL Global LLC, Trans American Customhouse Brokers LLC இன் 100% பங்குகளை 42.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வட்டியில்லா, கடனற்ற அடிப்படையில் வாங்கியுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.