ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த கப்பல்கள் ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமானது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், ´HIRADO´ இன்று (02) வந்தடைந்தது.
இந்த கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.