500 மில்லிகிராம் பாராசிட்டமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 500 மில்லிகிராம் பாராசிட்டமால் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.2.30.
பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.