கடன் கடிதங்களை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால், மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியமுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை சீர்செய்வதற்கு முயற்சிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெரவலப்பிட்டிய முனையத்திற்கு எரிவாயு கப்பலொன்று வருகை தந்துள்ளதாகவும் இன்று
(04) முதல் எரிவாயுவை விநியோகிக்கவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான டொலர் கையிருப்பில் இல்லையென லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.