இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய கோட்டாவின் தீர்மானம்

0
84

இரசாயன உரம் மற்றும் விவசாய இரசாயனப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டமையினால் கடந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நெல் மற்றும் தேயிலை உற்பத்தி குறைந்ததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஒவ்வொரு விவசாயிக்கும் அந்த ஆண்டு சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட ஆய்வின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here