ஹட்டன் – செனன் தோட்ட கே.எம். பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி கவலை பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களையும் தனது தனிப்பட்ட நிதியில் உடனடியாக வழங்கி வைத்தார்.








