நிதி அமைச்சர் பசில் மீது உடனடி விசாரணை!

0
124

அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று வெளியிட்ட கருத்து மிகவும் பாரதூரமானது எனவும் பசில் ராஜபக்ச நிதி அமைச்சர் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (05) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவுடன் இருந்த அரசாங்க அமைச்சர்கள் அவரை திருடன் என்று அழைப்பது பாரதூரமான நிலை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பசில் ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினால் முன்வைக்கப்பட்டாலும், அன்று அவ்வளவாக கவனம் செலுத்தாத நிலையில் இன்று அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் அதனையே கூறுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here