ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்க, கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர வெளிநாடு சென்றுள்ளமையினால், அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
N.S