தயாசிறி குறித்து வெளிவந்த செய்தி உண்மையா

0
189

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாசிறி ஜயசேகர இந்த நாட்களில் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ளதுடன், அவர் நாடு திரும்பும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவுடன் கலந்துரையாடியதன் பின்னர் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கினார்.

கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு பல கடமைகள் இருப்பதால், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாசிறி ஜயசேகர நாடு திரும்பும் வரை பதில் செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here