இலங்கையின் கடன் உத்தரவாதத்துக்கு சீனா ஆதரவு

0
218

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளன.

இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குனரான சீனா, மார்ச் 6 ஆம் திகதி அந்நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா தனது உத்தரவாதத்தை வழங்க தாமதித்ததன் காரணமாக, இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் தாமதமானமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here