கவனம் – வெப்பம் அதிகம்

Date:

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இதற்காக பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

பிள்ளைகளுக்கு அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மேலதிகமாக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், இந்த வெப்பமான சூழலில் தேமல், சொறி போன்ற தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரு முறையாவது குளிப்பாட்டுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். பயமின்றி சுமார் 20 நிமிடங்கள் வரை அவர்களை நீரில் இருக்கச் செய்வதன் மூலம் தோல் நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகாவிட்டால்,நீரிழப்பு நிலை ஏற்படுவதுடன் ‘வெப்ப அதிர்ச்சி’ நிலைக்கும் உள்ளாகலாம் என வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதயம் மற்றும் மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நிகழலாம் என்பதால் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...