தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் – கஞ்சன விஜேசேகர

0
143
Only India assisted Sri Lanka with fuel - Sri Lankan Energy Minister Kanchana Wijesekera

புதிதாக மின்இணைப்பினை பெற்றுக்கொள்ளும் மின்சாரபாவணையாளர்களுக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” அமைச்சில் நாங்கள் 2 முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். மிகக்குறைந்த கட்டணம் அறவிட வேண்டியுள்ள பாவணையாளர்களுக்கு சிறிது காலஅவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல் மின்சார மீள் இணைப்பு கட்டணம் இதுவரை மூவாயிரம் ரூபாயாக அறவிடப்பட்டுவந்த நிலையில் அதனை ஆயிரத்து 300 ரூபாயாகக் குறைத்துள்ளோம்.அதேபோல் இந்த ஆண்டிற்குள் குறித்த கட்டணத்தை 800 ரூபாயாகக் குறைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

புதிதாக மின்இணைப்பு கட்டணம் 35 முதல் 45 ரூபா வரை அறவிடப்படவுள்ளது. இதனை நூற்றுக்கு 25 சதவீத கட்டணத்தை செலுத்தி பாவணையாளர்கள் மின்இணைப்பை பெற்றுக்கொள்வதுடன் எஞ்சிய தொகையினை தவணைமுறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிப்பாளர் குழுவினரால் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” இவ்வாறு கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here