IMF கடன் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றம்!

0
110

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் எட்டப்படும் என அரசாங்கம் நம்புகிறது.

இந்த ஒப்பந்தத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம் உட்பட பலருக்கு அமைச்சரவை பதவிகளை வழங்கி ஜனாதிபதி விரைவில் அமைச்சரவையை மாற்றியமைப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அண்மையில் தெரிவித்திருந்தார். அமைச்சுப் பதவியைப் பெறுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சகித்தியின் உறுப்பினர்கள் இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here