பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Date:

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசித்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இடம்பெறுவதற்கு முன்னர் மாணவர் சங்கங்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புத்திக பத்திர தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த காலங்களில் பல பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், மீண்டும் அவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அது ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...