மருந்து பொருட்களின் விலையும் உச்சம் தொடும் அபாயம்

0
95

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை மேலும் நெகிழ்வானதாக மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானத்தை அடுத்து மருந்துகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மருந்துகள் வர்த்தக சங்கத்தின் தலைவர் கபில டி சொய்சா கூறுகையில்,

“மருந்துகளை விநியோகிக்க வழி இல்லை. மருந்து விநியோகஸ்தர்கள் மருந்துகளை விநியோகிப்பதில்லை. கேட்டால் நாணய மாற்று பிரச்சனை என்கிறார்கள். அதனால் சில மருந்துகள் இறக்குமதி செய்வதில்லை. முன்கூட்டியே தயார் செய்யாததுதான் பிரச்சனை.”

டொலர் பிரச்சனையால் மருந்து நிறுவனங்கள் இறக்குமதி செய்ய அச்சப்படுகின்றன. அவர்களுடன் பேசி தீர்வு காணப்படும் என மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த இரண்டு நாட்களில் மருந்துகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here