ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிய தேர்தல்கள் ஆணைக்குழு!

0
218

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அங்கீகாரம் அவசியம் என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here